கமலின் 'மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ' பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கீடு
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஆயத்தப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள திமுக கட்சி கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருக்கிறது. ஏற்கனவே, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி காங்கிரஸ் மற்றும் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடல வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், வரவுள்ள மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்தாலும், டார்ச் லைட் சின்னத்திலேயே போட்டியிட கமல் முடிவு செய்துள்ளதாகவும், தேர்தல் ஆணையம் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்காத பட்சத்தில் வேறு சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி மா நிலத்திற்கு வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இக்கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில், சமீபத்தில் சென்னை மற்றும் கோவையில் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.