வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (08:24 IST)

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கூடாது - அகில இந்திய காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கூடாது என அகில இந்திய காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 வருடங்களுக்கும் மேல் சிறையில் வாடும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
அமைச்சர் ஜெயக்குமார் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சட்டப்பிரிவு 161ன் கீழ் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரைத்திருப்பதாகவும், தமிழக அரசின் முடிவை ஆளுநர் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, அவர்கள் 7 பேரும் நாட்டின் பிரதமரையே கொன்றவர்கள், சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பெரிய மனதுடன் ராஜீவ் கொலை கைதிகள் மீது விரோதம் இல்லை என்று கூறி இருக்கலாம். ஆனால் அவர்கள் 7 பேரும் தண்டிக்கப்படவேண்டியவர்கள்.
 
மத்திய அரசும், தமிழக அரசும் இந்த விஷயத்தில் அரசியல் செய்து வருகின்றனர். ஒரு அரசின் கடமை  பயங்கரவாதிகளை தண்டிப்பதா? பாதுகாப்பதா? இப்பொழுது அவர்கள் செய்து கொண்டிருக்கும் செயல் அவர்களை பாதுகாப்பதன் அறிகுறியே ஆகும்.
 
எனவே தமிழக அரசு அந்த 7 பேரை விடுவிக்கக்கூடாது என்பதே அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என அவர் கூறியுள்ளார்.