1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 5 டிசம்பர் 2016 (19:45 IST)

கிலானியின் அறிக்கையே இறுதியானது - விலகும் அப்பல்லோ மர்மம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவர் கிலானி அளிக்கும் முடிவே இறுதியானது என்று தகவல் வெளியாகியுள்ளது.


 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை மோசம் அடைந்ததாக இன்று மாலையில் செய்திகள் வெளியானது.  
 
இந்நிலையில், அவரது உடல் நிலை குறித்து தவறான வதந்திகளை சில தொலைக்காட்சிகள் வெளியிட்டன. இதனைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியைடந்தனர். 
 
ஆனால், அப்படி வெளியான செய்திகள் வதந்தி என்றும், முதல்வருக்கு தொடந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
 
முதல்வருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவரான கிலானி தலைமையிலான மருத்துவர் குழுவினர்தான் சிகிச்சை அளித்து வருகின்றனர். எனவே, முதல்வரின் உடல் நிலை குறித்து கிலானி அளிக்கும் தகவல்தான் முக்கியமானது. அவர் இன்னும் எந்த முடிவும் கூறவில்லை எனவும், அதனாலேயே, ஜெ. உடல் நிலை குறித்து வெளியான செய்திகள் வதந்தி என அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.