வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 17 டிசம்பர் 2018 (20:29 IST)

ரூ.1,258 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை போல் தமிழகத்தில் உள்ள மதுரையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றும், அது தமிழகத்திற்கு மட்டுமின்றி தென்னிந்தியாவிற்கே பயனுள்ளதாக இருக்கும் என்றும் மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தது.

ஆனாலும் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்ற தகவலால் மதுரை மக்கள் தங்கள் நகரத்தில் எய்ம்ஸ் வருமா? வராதா? என்ற சந்தேகத்துடன் இருந்தனர்.

இந்த நிலையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டரில் மதுரை தோப்பூரில் ரூ.1,258 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக  தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் மதுரையில் எய்ம்ஸ் வருவது உறுதியாகியுள்ளது.