வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 21 டிசம்பர் 2020 (14:57 IST)

அதிமுக பொதுக்குழு, செயற்குழு தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியின் செயற்குழு பொதுக் குழுவைக் கூட்டி தேர்தலை சந்திப்பது எப்படி என்பது குறித்த வியூகத்தை அமைத்து வருகின்றனர் 
 
திமுக தனது நிர்வாக குழு கூட்டத்தை நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டி ஆலோசனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக அதிமுகவும் தனது பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூடும் தேதியை அறிவித்துள்ளார் 
 
அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு ஜனவரி 9ஆம் தேதி கூடும் என்றும் சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இந்த பொதுக்குழு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த பொதுக்குழுவில் தேர்தலை சந்திப்பது, கூட்டணி அமைப்பது, தேர்தல் வியூகம் உள்பட ஒருசில ஆலோசனைகள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக் குழுவில் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து விரிவான ஆலோசனை செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக செயற்குழு கூடும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது அடுத்து தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது