செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (07:57 IST)

மீண்டும் டிரெண்ட் ஆகும் 'கோபேக் மோடி': முடிவே இல்லையா?

கடந்த சில மாதங்களாக பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் அவருக்கு கருப்புக்கொடி காட்டுவதும், சமூக வலைத்தளங்களில் 'கோபேக் மோடி' என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டுக்கு கொண்டு வருவதும் தமிழக அரசியல் கட்சிகளின் முக்கிய பணிகளில் ஒன்றாக உள்ளது
 
இந்த நிலையில் இன்று தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ள நிலையில் இன்றும் டுவிட்டரில் மோடிக்கு எதிரான ஹேஷ்டேக்குகள் டிரண்டாகி வருகிறது. 'கோபேக் ஃபேசியஸ்ட் மோடி' மற்றும் 'கோபேக் மோடி' என இரண்டு ஹேஷ்டேக்குகள் இன்று காலையில் இருந்தே டிரெண்டாகி வருவதால் சமூக வலைத்தளங்கள் பரபரப்பாகியுள்ளது.
 
மேலும் தமிழக எதிர்க்கட்சிகள் அனைத்தும் பிரச்சாரத்தில் பிசியாக இருப்பதால் இன்று தமிழகம் வரும் பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டம் இருப்பது சந்தேகமே என கூறப்படுகிறது
 

கோபேக் மோடி மட்டுமின்றி கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின்போது மோடி கொடுத்த வாக்குறுதிகளும், அதில் நிறைவேறாதவை எத்தனை என்பது குறித்தும் டுவிட்டர் பயனாளிகள் பதிவு செய்து பாஜகவினர்களை வெறுப்பேற்றி வருகின்றனர். ஏற்கனவே அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று கூறி வரும் நிலையில் தேர்தல் நேரத்திலும் கோபேக் மோடி ஹேஷ்டேக் டிரண்டாவது பாஜகவினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது