தமிழகத்தை அடுத்து புதுவையிலும் கொரோனா கட்டுப்பாடுகள்: ஆளுனர் தமிழிசை அறிவிப்பு!
தமிழகத்தில் நேற்று கொரோனா கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் புதுச்சேரியிலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து உயர் அதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் அறிக்கை வெளியாகியுள்ளது.
இதன்படி புதுவையில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்றும் விழாக்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது
கடைகள், மால்கள் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி மற்றும் உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்றும், நீச்சல் குளங்களில் பயிற்சி பெறுபவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் ஆட்டோக்களில் இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தப்படுத்த வேண்டும் எனவும் முகக்கவசம் அணியாதவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.