செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 10 நவம்பர் 2022 (19:34 IST)

திருவள்ளூரை அடுத்து இன்னொரு மாவட்டத்திலும் நாளை பள்ளி விடுமுறை!

school
நாளை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதை அடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்து இருந்தார் என்பதை சற்று முன் பார்த்தோம்.
 
இந்த நிலையில் மேலும் ஒரு மாவட்டத்திற்கு பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
 
இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்து  நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பள்ளி விடுமுறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva