Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிறையில் ஒருமாதம் முடிந்தது; யாரும் பார்க்க வரவில்லை; விரத்தியில் சசிகலா

Last Modified: வெள்ளி, 17 மார்ச் 2017 (20:12 IST)

Widgets Magazine

பெங்களூர் சிறையில் சசிகலா அடைக்கப்பட்டு ஒருமாதம் முடிவடைந்துள்ள நிலையில் அவரை யாரும் சந்திக்கவில்லை என அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.


 

 
சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு கடந்த மாதம் 15ஆம் தேதி சசிகலா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று முன் தினத்தோடு ஒருமாதம் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. சசிகலாவை சிறையில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் என பலர் சென்று கடந்த மாதம் நேரில் சந்தித்தனர். இவர்களை தொடர்ந்து வளர்மதி, கோகுல இந்திரா, சி.ஆர்.சரஸ்வதி ஆகியோரும் சந்தித்து வந்தனர். 
 
அதிமுக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் கடந்த மாதத்தில் மட்டும் சசிகலாவை இரண்டு முறை சந்தித்து பேசியுள்ளார். முதல்வர் இதுவரை சசிகலாவை சிறையில் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சிறைக்கு சென்று ஒருமாதம் முடிவடைந்து விட்டது. 
 
இந்நிலையில் கடந்த சில நாட்களாக யாரும் சசிகலாவை சிறையில் சென்று சந்திக்கவில்லை. இதன் காரணமாக தற்போது அதிருப்தியில் இருந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

இரட்டை இலை சின்னம் யாருக்கு? இரு அணியினர் நேரில் ஆஜராக உத்தரவு - தேர்தல் ஆணையம்

வரும் 22ஆம் தேதி காலை 10 மணிக்கு டெல்லி தலைமை தேர்தல் அணையத்தில் சசிகலா மற்றும் ஓபிஎஸ் ...

news

கரூர் மருத்துவக்கல்லூரி விவகாரம்: அமைதி பேச்சுவார்த்தயில் உடன்பாடு இல்லாததால் திட்டமிட்டப்படி உண்ணாவிரதம்

தமிழகத்தில் கடந்த 2014 ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 12 ம் தேதி கரூர், புதுக்கோட்டை ஆகிய ...

news

வாட்ஸ்அப் மூலம் விபச்சாரம் செய்த பெண் கைது

சமூக வலைதளமான வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொழில் செய்து வந்த பெண்ணை காவல்துறையினர் கைது ...

news

ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞரை தாக்கிய பெண் போலீஸ் (வீடியோ)

பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையில் ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞரை பெண் காவல்துறை உதவி ...

Widgets Magazine Widgets Magazine