Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அபூர்வமாகிவிட்ட பருவ மழை? - நீண்ட நாட்களுக்குப் பிறகு வாய்ப்பு என தகவல்


லெனின் அகத்தியநாடன்| Last Modified செவ்வாய், 27 டிசம்பர் 2016 (04:27 IST)
தென்கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை சரியாகப் பெய்யாமல் ஏமாற்றிவிட்டது. வர்தா புயலிலும் போதிய மழை இல்லை. அந்த புயலுக்கு பின்னர் வானிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, தென்கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளதால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ”தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, இப்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது காற்றின் திசையை பொறுத்தே நகரக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :