1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (19:17 IST)

20 ஆண்டுகளுக்கு பிறகு வென்றுள்ளேன்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்!

1991-96-ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஜெயலலிதா, சசிகலா உள்பட 4  பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
 
 
இந்நிலையில் இந்த தீர்ப்பில் சசிகலா குற்றவாளி என நீதிமன்ற தீர்ப்பு வழங்கியதால் சசிகலா முதல்வராக பதவியேற்க  முடியாது என்பது உறுதியாகி உள்ளது. இந்த வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை மற்றும் 10 கோடி  ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கீழ் நீதிமன்ற நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்துள்ளனர்.
 
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவராய் இன்று தீர்ப்பளித்தனர். அப்போது, அதிமுக பொதுச் செயலாளர்  சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. மேலும்,  மூன்று பேரும் நான்கு வாரத்தில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
 
சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கான சிறை தண்டனை உறுதி  செய்யப்பட்டதோடு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜ-வைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, இந்த தீர்ப்பை தாம் எதிர்பார்த்ததாக  கூறியுள்ளார். முதன்முறையாக நீதிமன்றத்தில் வழக்கு பதிந்தவர் பா.ஜ.க-வின் மாநிலங்களவை எம்.பி., சுப்பிரமணியன் சுவாமி.  இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வந்ததையடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில், '20 ஆண்டுகளுக்குப் பிறகு நான் வென்றுள்ளேன்.  விரைவில் நிறைய பேர் சிறைக்குச் செல்வார்கள்' என்று பதிவிட்டுள்ளார்.