பாஜகவுடன் அதிமுக இணையும். சிவசேனா எம்பி கருத்து


sivalingam| Last Modified வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (07:17 IST)
தமிழகத்தில் மூன்று பிரிவுகளாக இருக்கும் விரைவில் பாஜகவில் இணையும் என்று சிவசேனா எம்பி ஆனந்த்ராவ் அத்கல் நேற்று மக்களவையில் கருத்து தெரிவித்தார்


 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக அதிமுக பிரிந்தது. பின்னர் சசிகலா அணி ஈபிஎஸ் அணி, தினகரன் அணி என இரண்டாக பிரிந்தது. தற்போது மூன்று அணிகளாக பிரிந்திருக்கும் அதிமுகவை இணைக்க வாய்ப்பு குறைவு என்றே கருதப்படுகிறது
 
இந்த நிலையில் நேற்று மக்களவையில் பேசிய சிவசேனா எம்பி ஆனந்த்ராவ் அத்கல் தற்போது, பீகார் பா.ஜ.,வுடன் இணைந்து விட்டது. தமிழகத்தில், பிளவு பட்டு உள்ள, அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்க போராடும் இரு அணிகளும், விரைவில், பாஜகவுடன் இணைந்துவிடும். ஒரே சித்தாந்தம், ஒரே தலைவர் என்பதை நான் ஆதரிக்கிறேன்' என்று பேசினார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :