Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சபாநாயகருடன் கொறடா ஆலோசனை; 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா?

Last Modified: வியாழன், 14 செப்டம்பர் 2017 (11:30 IST)

Widgets Magazine

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் பதில் அளிக்குமாறு அளித்த நோட்டீஸ் காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில் அரசு கொறடா சபாநாயகர் தனபாலை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.


 

 
முதலவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்தனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி அணி சட்டசபையில் பெரும்பான்மையை இழந்தது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தன்னிச்சையாக செயல்பட்டதாக அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்தார்.
 
இதையடுத்து கொறடாவின் புகார் குறித்து பதிலளிக்குமாறு சபாநாயகர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார். சபாநாயகர் பதில் அளிக்குமாறு அனுப்பிய நோட்டீஸ் காலக்கெடு இன்று முடிவடைகிறது. இந்நிலையில் அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். 
 
இந்த ஆலோசனைக்கு பிறகு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் தற்போது தினகரன் அணியில் உள்ள 18 எம்.எல்.ஏ.க்கள் கர்நாடகாவில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஆட்சியை கலைப்போம் - தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ பேட்டி

சபாநாயகரை சந்திக்கும் திட்டமில்லை எனவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை ...

news

செல்போனுக்காக குழந்தையை விற்ற தந்தை - ஒடிசாவில் அதிர்ச்சி

தனது ஆண் குழந்தையை விற்று அதில் செல்போன் வாங்கிய தந்தை பற்றிய செய்தி அதிர்ச்சியை ...

news

ஜனாதிபதி சந்திப்பு..அதன் பின் நீதிமன்றம் - தினகரனின் அதிரடி திட்டம்

தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்களை ஜனாதிபதி இல்லத்திற்கு அழைத்து செல்லும் முயற்சியில் தினகரன் ...

news

'நிச்சயமாக நான் உங்களுடன் இருப்பேன்: ராம்ஜெத்மலானிக்கு வாக்கு கொடுத்த வைகோ

சமீபத்தில் வழக்கறிஞர் தொழிலில் இருந்து ஓய்வு பெற்ற இந்தியாவின் மூத்த வழக்கறிஞர்களில் ...

Widgets Magazine Widgets Magazine