1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By abi
Last Modified: சனி, 30 ஏப்ரல் 2016 (13:22 IST)

தங்கள் கட்சியினரே செருப்பை வீசியதால் அதிர்ச்சி அடைந்த விந்தியா

அதிமுக கட்சி சார்பாக வாக்களர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் நட்சத்திர பேச்சாளர் விந்தியா மீது அதிமுக தொண்டர்கள் செருப்பு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது


 

சட்டமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில்  எதிர்க் கட்சிகளை சரமாரியாக தாக்கி பேசிக் கொண்டிருக்கின்றனர். இதையடுத்து அதிமுக சார்பாக பல நடிகர், நடிகைகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் முழ்கி இருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக சார்பாக பிரச்சாரம் செய்து வரும் நடிகை விந்தியா  நேற்று நன்னிலம் தொகுதியில் போட்டியிடும் காமராஜை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தில் நடிகை விந்தியா இரவு நேரம் ஆகிவிட்டதால் என்னால் பேச முடியாது என்று கூறி வேறு எதுவும் பேசாமல் அவரது உரையை முடித்தார்.

இதைத்தொடர்ந்து, பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்திருந்த அதிமுக தொண்டர்கள் ஆத்திரம் அடைந்து நடிகை விந்தியா மீது செருப்பு வீசினர். இதனால் அதிமுகவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டதால் நடிகை விந்தியா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.