சிறை கைதி சசிகலா ஜனாதிபதி யார் என்ற முடிவை எடுப்பாராம்!

சிறை கைதி சசிகலா ஜனாதிபதி யார் என்ற முடிவை எடுப்பாராம்!


Caston| Last Modified செவ்வாய், 20 ஜூன் 2017 (12:46 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் தண்டனை உறுதி செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா.

 
 
இவர் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லுமா செல்லாதா என்பது இன்னமும் உறுதியாகாமல் தேர்தல் ஆணையத்தின் முன்னிலையில் உள்ளது இந்த விவகாரம்.
 
இந்நிலையில் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா நாட்டின் உயரிய பதவியான நாட்டின் முதல் குடிமகன் என கூறப்படும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முடிவை எடுப்பார் என அவரது தம்பி திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் கூறியுள்ளார்.
 
முன்னதாக ஜெய் ஆனந்த் தனது முகநூல் கணக்கில் ஜெயலலிதா சிகிச்சை எடுத்துக்கொண்ட வீடியோ தன்னிடம் இருப்பதாகவும், அதனை நேரம் வரும்போது வெளியிடுவேன் எனவும் கூறியிருந்தார்.
 
இந்நிலையில் இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஜெய் ஆனந்த், தற்போது சசிகலா தான் பொதுச்செயலாளர் எனவும் அவர் தான் கட்சியை கட்டுப்படுத்தி நடத்தி வருவதாகவும், போயஸ் கார்டனும் சசிகலா கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறியுள்ளார்.
 
மேலும், இரட்டை இலை சின்னத்தை மீட்க அனைத்து மாவட்ட செயலாளர்களும் எங்களுடைய பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரம் வரும் போது சசிகலாவை சிறையில் சென்று சந்திப்பார். சசிகலா தான் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான முடிவை எடுப்பார் என ஜெய் ஆனந்த் கூறினார்.

Widgets Magazine
webdunia

இதில் மேலும் படிக்கவும் :