வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 24 பிப்ரவரி 2022 (20:06 IST)

ஜெயகுமார் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்: அதிமுக அறிவிப்பு!

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது கைதை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்
 
இதுகுறித்து அதிமுக தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அவர்கள் சம்பந்தப்படாத வழக்கில் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்து இருப்பதை கண்டித்தும் ஜாமினில் வெளிவர முடியாத அளவுக்கு தொடர் வழக்குகளை அவர் மீது தொட முயற்சிக்கும் முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் பிப்ரவரி 28-ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது .