Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலா முன் சங்கு ஊதிய அதிமுகவினர் - போயஸ்கார்டனில் பரபரப்பு


Murugan| Last Modified செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (15:18 IST)
பொதுச்செயலாளர் சசிகலா முன்பு, அதிமுகவினர் சிலர் சங்கு ஊதி தங்கள் எதிர்ப்பை காட்டிய சம்பவம் போயஸ் கார்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை தமிழக முதல்வர் பதவியில் அமர வைக்கும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். அதன் விளைவாக ஓ.பி.எஸ் ராஜினாமா செய்தார். மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அதிமுக எம்.ல்.ஏ கூட்டத்தில் சட்டமன்ற பேரவைத் தலைவராகவும் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, தமிழக முதல்வராக சசிகலா விரைவில் பதவியேற்பார் எனத் தெரிகிறது.
 
இந்நிலையில், சென்னை போரூரை சேர்ந்த அதிமுகவினர் 10 பேர் நேற்று நள்ளிரவு போயஸ் கார்டன் வந்தனர். அவர்கள் சசிகலாவின் புகழ் பாடிய படியே நடந்து வந்தனர். எனவே, அவர்களை போலீசார் அனுமதித்தனர்.
 
அப்போது, வீட்டின் பால்கனியில் சசிகலா நின்று கொண்டிருந்தார். அவரைக் கண்டதும், அவர்கள் மறைத்து வைத்திருந்த சங்கை எடுத்து ஊதத் தொடங்கினர். இதனால், அங்கிருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதைக் கண்டு, சசிகலாவும் அதிர்ச்சியடைந்தார்.
 
இதையடுத்து, போலீசார் உடனடியாக அவர்களை அங்கிருந்து அழைத்து சென்றனர். தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டு, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :