Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் டெல்லி பயணம்


Abimukatheesh| Last Updated: புதன், 8 பிப்ரவரி 2017 (20:48 IST)
எம்.எல்.ஏ.க்கள் சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கின்றனர்.

 


நாளை பிற்பகல் தமிழக பொறுப்பு ஆளூநர் வித்யாசாகர் ராவ் சென்னை வரவுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி பயணம் செய்கின்றனர்.

டெல்லி சென்று ஜனாதிபதியை சந்தித்து, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு ஆளூநர், முதலமைச்சர் பதவி பரிமாணம் செய்து வைக்க வலியுறுத்த செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

தற்போது வரை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தனியார் பேருந்து மூலம் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆளூநர் சென்னை வரும் வரை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சசிகலாவின் கட்டுப்பட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :