Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலா முதலமைச்சராவாரா?: அதிமுக எம்எல்ஏக்கள் அவசர கூட்டம்!

சசிகலா முதலமைச்சராவாரா?: அதிமுக எம்எல்ஏக்கள் அவசர கூட்டம்!


Caston| Last Modified வெள்ளி, 30 டிசம்பர் 2016 (09:48 IST)
பொதுக்குழு நேற்று கூடி சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்துள்ள நிலையில் இன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

 
 
சென்னை வானகரத்தில் நேற்று கூடியது அதிமுக பொதுக்குழு கூட்டம். இந்த கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கியமானது சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.
 
இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு அவசரமாக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து எம்எல்ஏக்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா நாளை பொறுப்பேற்க உள்ள நிலையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக அமைசர்கள் கடந்த சில நாட்களாக கூறிவரும் நிலையில் இன்று நடைபெறும் இந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலா முதல்வராவது குறித்து விவாதிக்கப்படும் என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :