ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 23 பிப்ரவரி 2022 (12:26 IST)

கோவையில் அதிமுகவின் தோல்விக்கு பாஜக காரணமா?

அதிமுக கோட்டை என்று கூறப்பட்ட கோவையில் திமுக பெருவாரியான வெற்றி பெற்றதையடுத்து பாஜகவை கூட்டணியில் இருந்து கழட்டி விட்டதால் தான் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன
 
கோவையில் உள்ள 14 வார்டுகளில் அதிமுக மற்றும் பாஜக பெற்ற வாக்குகளை கூட்டினால் திமுக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை விட அதிகமாக வருவது தற்போது தெரிய வந்துள்ளது 
 
இதனால் கோவையில் பாஜக கூட்டணி இல்லாததால் அதிமுக 14 வார்டுகளை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இதேபோல் தமிழகம் முழுவதும் கூட்டணியில் பாமக, பாஜக இல்லாததால் பல வார்டுகளில் அதிமுக இழந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
 
13 கட்சி கூட்டணியுடன் வலுவுடன் போட்டியிடும் திமுக கூட்டணியை எதிர்க்க அதிமுக குறைந்தபட்சம் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கவேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது.