வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 5 ஜூன் 2024 (14:49 IST)

பாஜக கூட்டணியை முறித்திருக்க கூடாது.. ஈபிஎஸ்-க்கு எதிராக பொங்கிய மூத்த தலைவர்கள்..!

பாஜக கூட்டணியை முறித்திருக்க கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து அதிமுகவின் மூத்த தலைவர்கள் குரல் கொடுத்து வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அதிமுக பாஜக இணைந்தே நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் என்று கூறிய நிலையில் அண்ணாமலையின் கடும் விமர்சனம் காரணமாக பாஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்தார் 
 
அதுமட்டுமின்றி பாஜகவை கூட்டணியிலிருந்து வெளியேற்றினால் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கும் என்பதும் எடப்பாடி பழனிச்சாமியின் எண்ணமாக இருந்தது. ஆனால் தேர்தல் முடிவு வெளியான பின்னர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவு தவறு என்பது தெரியவந்துள்ளது 
 
தமிழகத்தை பொருத்தவரை கூட்டணி பலமாக இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்பது மீண்டும் ஒருமுறை உணர்த்திருப்பதாக கூறிய அதிமுக மூத்த தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி எடுத்த முடிவு தவறு என்று விமர்சனம் செய்து வருகின்றார்
 
குறிப்பாக ஆகியோர் கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, உதயக்குமார், செல்லூர் ராஜு, கே.சி.வீரமணி ஆகியோர், பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டிருக்கக்கூடாது என கூறி வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran