Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மோடியின் சகுனி சொக்கட்டான் - ஓ பன்னீர் செல்வம்


bala| Last Modified திங்கள், 26 டிசம்பர் 2016 (14:53 IST)
இது தமிழகத்தில் மழை காலம் அல்ல. ரெய்டுகளின் காலம். கருப்பு அமைச்சர்களும், அதிகாரிகளும் கலங்கி நிற்கும் காலம். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு தமிழகத்தில் ஊழலை ஒழிக்க வந்த நவீன பரமாத்மாவாக பிஜேபி. ஊழல் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும் தான். கருப்பு அமைச்சர்களும், அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டும் தான். அது யாராக இருந்தாலும், அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் பிஜேபி யின் உண்மை ஆவா அது அல்ல. அதிகாரப் பசி ஆட்சிப் பசி அதனுடையது. அவர்களின் புதிய சகுனி சொக்கட்டான் தான் நமது மாண்பு மிகு முதலமைச்சர் O.P.S

 


எளிமையின் மறு உருவம், பணிவின் சிகரம், விசுவாசத்தின் மறுப்பெயர் தான் நம் பழைய பெரியக்குளத்து பன்னீர். தலைமை செயலகம், கூட்டுறவு வங்கிகள் டெபாசிட், துணை ராணுவம் வருகை என அனைத்திற்கும் ஊடகங்கள் கேட்கும் கேள்விகளுக்கும், மௌனமே வாய் மொழியாய், மௌனமே வழி மொழிதலாய், நம் மௌன குரு பன்னீர்.  சிம்பிளா  சொன்ன படையப்பா படத்தில் ரஜினியும் செந்திலும் பேசுவாங்களே ஒரு டயலாக். அது போல நாம மோடி சார், O.P.S ஐ காண்பித்து, இவர் தான் ஓ பன்னீர் செல்வம், இவர் உங்கள் முதலமைச்சர், ஆனா இவர் ஆட்சி, அதிகாரம் என்னுடையது என்கிறார்.  

ஏன் இந்த திடீர் பன்னீர் பாசம்

வெங்கையா நாயுடு,  H ராஜா எல்லாம் தீடீர்  தீடீர் என்று பன்னீருக்கு குட் காண்டாக்ட் செர்டிபிகேட் கொடுக்கிறர்கள். ஏன் சசிகலா மற்றும் மன்னார்குடி  மாபியாக்களுக்கு எதிராக பொது செயலாளர் ஆக கூட நிறுத்தப் படலாம்.  சசிகலா பொது செயலாளர் ஆக மட்டும் ஆவதில் பிரச்சனை இல்லை என்று, அவர் முதலமைச்சராக சில அமைச்சர்களால் பரிந்துரைக்கப்பட்டாரோ அப்போதே பன்னீர் வாழும் சின்ன அய்யா ஆனார். இன்னும் சில நெட்டிசன்ஸ் தமிழன் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்கிறார்கள். அப்போ சசிகலா என்ன மராத்தி பொண்ணா ? சேகர் ரெட்டி என்று பிடிபட்டாரோ அன்றே அரசியல் என்னும் பரமப்பத விளையாட்டில் சகுனி சொக்கட்டான் ஆனார் மாண்பு மிகு முதலமைச்சர் O.P.S

சகுனி ஆட்டம்

இதில் வருத்தம் என்ன என்றால் ? அ தி மு க வின் தீரன், மது சூதனன் தவிர யாரும் மோடியை விமர்சிக்க தயங்குகிறார்கள். தமிழகத்துக்கு குரல் கொடுக்க மேற்கு வங்கத்து பெண் தேவைப்படுகிறார். அ தி மு க வில் ஒரு 100 பேர் ஊழல்வாதிகளாக இருக்கலாம். அவர்கள் நிச்சயம் தண்டிக்கப் பட வேண்டும் தான். அதற்காக ஒட்டு மொத்த கட்சியையும் ஆட்சியையும் அதிகார துஷ்ப்பிரயோகம் செய்து அபகரிக்க பார்க்கிறார்கள் வியூக விற்பன்னர்கள்.   மகாபாரத்தில் சகுனியின் சொக்கட்டான் சகுனி என்ன நினைக்கிறாரோ ? அதன் படி உருளும். தாயம் என்றால் தாயம், மூன்று என்றால் மூன்று. அது போல தான் மோடியும், பன்னீரும், சகுனியும், சொக்கட்டானும்


கட்டுரையாளர்:

இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர்.

 sumai244@gmail.com


இதில் மேலும் படிக்கவும் :