அதிமுக பொதுக்குழு 30 நிமிடங்களில் கதம் கதம்: இது தான் நடக்குமாம் இன்று!

அதிமுக பொதுக்குழு 30 நிமிடங்களில் கதம் கதம்: இது தான் நடக்குமாம் இன்று!


Caston| Last Modified வியாழன், 29 டிசம்பர் 2016 (08:27 IST)
ஒட்டு மொத்த தமிழகமும் இன்று நடைபெற உள்ள பொதுக்குழுவை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவியை இனிமேல் வகிக்கப்போவது யார் என்ற முக்கிய முடிவு இன்று தெரிந்துவிடும்.

 
 
கடந்த 5-ஆம் தேதி ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து சசிகலா பொதுச்செயலாளர் பதவியை வகிக்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தாலும் அவருக்கு கனிசமான எதிர்ப்பும் உள்ளது.
 
குறிப்பாக சமூக வலைதளங்களில் அதிமுக தொண்டர்கள் சசிகலா தலைமை ஏற்க இருப்பதை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் பொதுக்குழுவில் சசிகலாவை பொதுச்செயலாளராக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்ளும், ஏதாவது அதிசியம் நடந்துவிடாத என எதிர்ப்பாளர்களும் காத்திருக்கின்றனர்.
 
இதனையடுத்து இன்று காலை முதலே சொகுசு பேருந்து மூலம் அதிமுகவினர் பொதுக்குழுவுக்கு வந்தவண்ணம் உள்ளனர். மேலும் இன்று நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா கலந்துகொள்ளமாட்டார். அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடக்கும் பொது குழுவில் சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்படும்.
 
இந்த தீர்மானம் சசிகலாவிடம் கொடுக்கப்பட்டு பின்னர் சசிகலா பதவியேற்றுக் கொண்டு உரையாற்றுவார் என தெரிகிறது. மேலும் இந்த பொதுக்குழு 30 நிமிடங்களில் முடிந்துவிடும் என கூறப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :