ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 3 ஏப்ரல் 2023 (13:00 IST)

இடைக்கால உத்தரவு போட முடியாது..! விசாரணை ஒத்திவைப்பு! – சிக்கலில் ஓபிஎஸ்!

அதிமுக பொதுக்குழு தீர்மானம் மீதான மேல்முறையீட்டில் இடைக்கால உத்தரவிட நீதிமன்றம் மறுத்துள்ளது.

அதிமுகவில் இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மோதல் நிலவி வந்த நிலையில் கடந்த ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்ததுடன், ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்த ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என உத்தரவிட கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பளித்தது. தனி நீதிபதியின் இந்த தீர்ப்பிற்கு எதிராக ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தார்.

இதுகுறித்த நேரடி இறுதி விசாரணைக்கு செல்ல இபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பு ஒத்துக்கொண்ட நிலையில் இன்று விசாரணை நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் பொதுக்குழு தீர்மான வழக்கின் தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஏப்ரல் 20ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அதுவரை இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஓபிஎஸ் தரப்பு கோரிய நிலையில், அது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் என இடைக்கால உத்தரவு அளிக்க நீதிபதிகள் மறுத்துள்ளனர்.

Edit by Prasanth.K