செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 ஏப்ரல் 2024 (11:17 IST)

தேர்தல் முடிவுக்கு பின் அதிமுகவை குறி வைக்கிறதா பாஜக? வழக்குகள் விரைவுப்படுத்த வாய்ப்பா?

admk office
தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுக பிரமுகர்களின் மீது உள்ள வழக்குகள் விரைவுப்படுத்தப்படும் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரயறுப்பதை அடுத்து அதற்குள் அதிமுகவை ஒரு வழி செய்து விட வேண்டும் என்று பாஜக மேலிடம் முடிவு செய்திருப்பதாகவும் அதிமுக தலைவர்கள் மீது உள்ள வழக்குகளை விரைவுப்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக கொடநாடு கொலை வழக்கு விரைவுபடுத்தப்படும் என்றும் அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உள்ள குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் உறுதியானால் அதிமுகவை நிலை குலைய செய்யலாம் என்ற எண்ணமும் பாஜக மேல் இடத்திற்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது இருக்கும் வழக்குகளையும் துரிதப்படுத்தி சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அதிமுகவின் வேகத்தை கட்டுப்படுத்த முடியும் என்று பாஜக மேல் இடத்திற்கு சிலர் அட்வைஸ் கொடுத்திருப்பதாகவும் அதன்படி பல பழைய வழக்குகள் தூசி தட்ட தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran