திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 9 ஏப்ரல் 2023 (12:20 IST)

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மைத்ரேயன் பாஜகவில் இணைந்தாரா?

கடந்த ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி மைத்ரேயன் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
அதிமுகவின் முன்னாள் ராஜசபா உறுப்பினர் மைத்ரேயன் அதிமுகவின் முக்கிய தலைவராக இருந்து வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக அறிவித்தார். 
 
இதனை அடுத்து அவர் விரைவில் பாஜகவில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் பாஜகவில் சேர்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழ்நாடு பாஜகவில் இருந்த அவர் மீண்டும் அதிமுக திரும்பிய நிலையில் தற்போது மீண்டும் பாஜகவில் இணையுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva