துப்பாக்கி தூக்கிய ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ - தெறித்து ஓடிய சசிகலா விசுவாசிகள் (வீடியோ)


Murugan| Last Modified வியாழன், 9 பிப்ரவரி 2017 (18:34 IST)
சசிகலா உருவ பொம்மையை எரித்த அரியலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ இளவழகன் மீது, சசிகலா விசுவாசிகள் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும், அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கும் எழுந்துள்ள மோதல் காரணமாக, தமிழக அரசியல் பரபரப்பின் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
 
ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் சசிகலாவிற்கு எதிராகவும், சசிகலா ஆதரவாளர்கள் ஓ.பி.எஸ்-ற்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கி வருவது தமிழகமெங்கும் அதிகரித்து வருகிறது. 
 
இந்நிலையில், அரியலூர் தொகுதி முன்னாள் இளவழகன் தன்னுடைய ஆதரவாளர்களுடன், சசிகலா உருவ பொம்மையை எரிக்கும் போராட்டத்தை நடத்தினார். அப்போது, அங்கு கையில் ஆயுதங்களுடன் வந்த சசிகலா ஆதரவாளர்கள், இளவழகன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தினார்.
 
இதனால் கோபமடைந்த இளவழகன், இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தார். இதைக் கண்டவுடன், சசிகலா ஆதரவாளர்கள், அங்கிருந்து விலகி ஓட்டம் பிடித்தனர். துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கு இளவழகன் அரசாங்க அனுமதி வாங்கியிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது...
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :