புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 6 டிசம்பர் 2019 (18:15 IST)

கூட்டணியுடன் கூட்டு ஆலோசனையில் அதிமுக!

உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து முட்வெடுக்க தனது கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனையில் ஈடுப்பட்டது அதிமுக. 
 
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. 
 
இந்நிலையில் இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் திமுக, வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது தொகுதி மறு வரையறை செய்த பின்னரே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு சற்று முன்னர் வெளியானது. 
 
இதில் தமிழகத்தில் தொகுதி மறு வரையறை செய்யப்படாத ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்றும் அந்த ஒன்பது மாவட்டங்களில் தொகுதி மறு வரையறை செய்த பின்னர் நடத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
 
இதனை அடுத்து சற்று முன்னர் பேட்டியளித்த மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிச்சாமி அவர்கள் ’உள்ளாட்சித் தேர்தல் தேதி மாற்றப்படும் என்றும் புதிய தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
இதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என்பதும் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் புதிய தேதியில்தான் தேர்தல் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இதற்கிடையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக ஆலோசனை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தேமுதிக நிர்வாகிகள் மற்றும் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன், கே.டி.ராகவன் ஆகியோர் வந்தனர். மேலும் தமாகாவுடன் அதிமுக ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளது.