1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 29 செப்டம்பர் 2019 (08:40 IST)

3 மாதங்களில் அதிமுக-அமமுக இணைப்பு: சசிகலாவின் மெகா பிளான்

இன்னும் மூன்று மாதங்களில் அதிமுகவுடன் அமமுகவை இணைக்க சசிகலா மெகா திட்டம் வைத்திருப்பதாகவும் இந்த இணைப்புக்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது
 
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா நன்னடத்தை விதியின் கீழ் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாகவும், அவர் விடுதலையானதும் கட்சி சசிகலா கட்டுப்பாட்டிலும், ஆட்சி எடப்பாடி கட்டுப்பாட்டிலும் இருக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது
 
எனவேதான் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்லில் அமமுக வேட்பாளர்களை நிறுத்த வேண்டாம் என சசிகலா தினகரனிடம் கூறியதாகவும் அதனால் தான் தினகரன் வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்றும் சசிகலாவின் உத்தரவின்படி அடுத்த ஆண்டு ஜனவரியில் அதிமுக-அமமுக இணைப்பு நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது
 
அதேபோல் தினகரன் தேசிய அரசியலுக்கு அனுப்பப்படுவார் என்றும், அவருக்கும் மாநில அரசுக்கும் சம்பந்தம் இல்லாமல் அதிமுக தலைமை பார்த்து கொள்ளும் என்றும், வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வலுவான அணி, ரஜினி ஆகியவற்றை எதிர்கொள்ள இந்த இணைப்பு அவசியம் என்றும் கருதப்படுகிறது
 
அதிமுக, அமமுக இணைந்த பின்னர் பாஜக, தேமுதிக, பாமக போன்ற கட்சிகளுடன் அதிமுக கூட்டணி உருவாகும் என்றும் மீண்டும் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.