செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 10 மார்ச் 2021 (08:06 IST)

அதிமுக விடிய விடிய பேச்சுவார்த்தை: முற்றுப்பெற்ற தொகுதி பிறிவு!!

அதிமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் கூட்டணி கட்சிகளையும் அவற்றிற்கான தொகுதிகளை ஒதுக்கும் பணிகளையும் வேக வேகமாக நடத்தி முடித்தது. 
 
அதன்படி, அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக இடம் பெற்றுள்ளது. பாஜகவிற்கு 20 தொகுதிகளும், பாமகவிற்கு 23 தொகுதிகளும் அதிமுக சார்பில் ஒதுக்கப்பட்டு கையெழுத்தாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து எந்தெந்த தொகுதி ஒதுக்கப்பட வேண்டுமென விடிய விடிய ஆலோசனை நடைபெற்றது. 
 
பாமக, பாஜகவுடனான இந்த ஆலோசனை வெற்றிகரமான முடிந்த நிலையில் இன்று அதிமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.