புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (09:22 IST)

நீட் தேர்வுக்கு கூடுதல் மாணவர்கள் விண்ணப்பம்!

தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வுக்கு 11,236 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

 
மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு ஜூலை 13-ஆம் தேதி முதல் விண்ணப்பம் தொடங்கியது. இந்த நிலையில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று கூறப்பட்டு இருந்த நிலையில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை கடைசி தேதி சமீபத்தில் நீட்டிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வுக்கு 11,236 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு 8,300 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு ஏறக்குறைய கூடுதலாக 3,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
 
11 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை முன்னிட்டு இந்த ஆண்டு நீட் தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக ஏற்கனவே தேசிய தேர்வுகளை அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.