Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிங்கம் தனியாக இருந்தால் சிறுநரி கூட வேட்டையாடும்: ஜெயலலிதா சமாதியில் விந்தியா!

சிங்கம் தனியாக இருந்தால் சிறுநரி கூட வேட்டையாடும்: ஜெயலலிதா சமாதியில் விந்தியா!


Caston| Last Modified வியாழன், 18 மே 2017 (09:32 IST)
அதிமுகவின் பிரபல நட்சத்திர பேச்சாளராக விளங்கியவர் நடிகை விந்தியா. ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமான பேச்சாளர் அவர். ஜெயலலிதாவின் மறைவால் சோகத்தில் இருந்த விந்தியா 6 மாதங்களுக்கு பின்னர் வெளியே வந்துள்ளார்.

 
 
ஜெயலலிதா மறைந்து 6 மாதத்துக்கு பின்னர் நேற்று மாலை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சமாதிக்கு வந்த விந்தியா அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அம்மாவின் மரணத்திலிருந்து என்னால் மீண்டு வர இயலவில்லை. தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக சோகத்தில் இருந்து மீண்டு வந்துள்ளேன் என கூறினார்.
 
மேலும் இரு அணிகளாக பிரிந்துள்ளதை பற்றி பேசிய அவர், அதிமுகவின் இரு அணிகளும் இணைவதில் எனக்கு மிகவும் சந்தோஷம், ஆனால் இணைவதற்கான நோக்கம் மிகத்தெளிவாக இருக்க வேண்டும். பசு கூட கூட்டமாக இருந்தால் சிங்கத்தால் வேட்டையாட முடியாது, சிங்கம் தனியாக இருந்தால் சிறுநரி கூட வேட்டையாடும் என்று பேசினார்.


இதில் மேலும் படிக்கவும் :