செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (07:40 IST)

52 வருஷம் ஆலமரம் அதிமுக.. நேத்து முளைச்ச புல் அண்ணாமலை.. நடிகை விந்தியா

52 ஆண்டு ஆலமரம் அதிமுக என்றும், நேற்று முளைத்த புல் அண்ணாமலை என்றும் அதிமுகவை சேர்ந்த நடிகை விந்தியா நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய பின்னர் பாஜகவை அதிமுக பிரமுகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். மீண்டும் பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என ஜெயகுமார் உள்ளிட்ட தலைவர்கள் பேசி வரும் நிலையில் நேற்று நடந்த அதிமுக கூட்டம் ஒன்றில் நடிகை விந்தியா ஆவேசமாக அண்ணாமலையை விமர்சனம் செய்தார்.

என்னை பொறுத்தவரை ஸ்டாலினுக்கும் அண்ணாமலைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் ஸ்டாலின் விடியலை தருகிறேன் விடுதலை தருகிறேன் என்று உதார் விட்டுக் கொண்டு இருப்பார் என்றும் அண்ணாமலை கூட இருப்பவரையே வீடியோ எடுத்து கட்சியிலிருந்து நீக்குவார் என்றும் கூறினார்.

அண்ணாமலை அரசியலில் சேர்வதற்கு பதிலாக வீடியோகிராபராக மாறி இருந்தால் அவர் தனது வாழ்க்கையில் முன்னேறி இருப்பார் என்றும் அவர் கூறினார். அதிமுக 52 ஆண்டு கால ஆலமரம் போல் வளர்ந்து இருக்கிறது என்று ஆனால் நேற்று முளைத்த புல் அண்ணாமலை என்றும் அதிமுகவை அவரால் அசைக்கக்கூட முடியாது என்றும் கடுமையாக விமர்சனம் செய்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


Edited by Siva