Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நித்திக்கு ஆதரவாக நடிகை ரஞ்சிதாவின் கலாட்டா!

நித்திக்கு ஆதரவாக நடிகை ரஞ்சிதாவின் கலாட்டா!


Caston| Last Modified புதன், 17 மே 2017 (14:55 IST)
நடிகை ரஞ்சிதா பிரபல சாமியார் நித்தியானந்தாவின் தீவிர பக்தை, சீடர் என்பது ஊர் அறிந்த விஷயம். இவர்கள் இருவரும் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ ஊடகங்களில் வெளியானதை அடுத்து இருவரும் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.

 
 
ஆனல் அவை மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோ என்று இருவரும் கூறி வந்தனர். தொடர்ந்து நடிகை ரஞ்சிதா நித்தியானந்தாவுக்கு ஆதரவாகவே இருந்து வந்தார். ஊடகங்களையும் இருவரும் சேர்ந்தே சந்தித்து வந்தனர்.
 
இந்நிலையில் தற்போது நடிகை ரஞ்சிதா நித்தியானந்தாவுக்கு ஆதரவாக சென்னை பல்லாவரத்தில் ஒருவரை குடியிருப்பில் இருந்து காலி செய்ய மிரட்டியும், அங்கு குடிசை ஒன்றை அமைத்து நித்தியானந்தா படத்துக்கு பூஜை செய்தும் வருகிறார்.
 
பல்லாவரத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு கிராம நத்தம் இடமாக 2 ஏக்கர் நிலம் உள்ளது. தற்போது 30 கோடி மதிப்புள்ள அந்த இடத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக கிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் திடீரென அந்த இடம் தனக்கு சொந்தமானது என ராமநாதன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் போதுமான ஆதரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாததால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் கிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள் தொடர்ந்து அந்த இடத்தில் வசிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
 
இந்நிலையில் திடீரென நடிகை ரஞ்சிதா மற்றும் நித்தியானந்தாவின் சீடர்கள் சிலர் ஒன்று கூடி பல்லாவரத்துக்கு வந்து இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது, ராமநாதன் என்பவர் எங்களுக்கு இதனை எழுதி கொடுத்துவிட்டார் என கூறியுள்ளனர். எனவே உடனடியாக இங்கிருந்து நீங்கள் காலி செய்ய வேண்டும் இல்லையென்றால் நடக்குறதே வேறு என மிரட்டியுள்ளனர்.
 
மேலும் அந்த இடத்தில் ஒரு சிறிய குடிசை ஒன்றை அமைத்து அதில் நித்தியானந்தாவின் படத்தை வைத்து பூஜை செய்து வருகின்றனர் ரஞ்சிதாவும் நிதியானந்தாவின் சீடர்களும். இதனையடுத்து இரு தரப்பினரும் காவல்துறையில் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :