Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இதற்கு பெயர்தான் கவுன்சிலிங்கா?. நியுசென்ஸ் - குஷ்புவை வாரிய நடிகை ரஞ்சனி


Murugan| Last Modified வியாழன், 1 டிசம்பர் 2016 (15:31 IST)
தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்படும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

 

 
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும், சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை, நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வருகிறார். இதனை தொடர்ந்து தற்போது சன் டிவியிலும் நிஜங்கள் என்ற பெயரில் நடிகை குஷ்பூ குடும்ப பிரச்சனைகளை வைத்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார்.  
 
மேலும், இது போன்ற நிகழ்ச்சிகளை தெலுங்கில் நடிகை ரோஜா தற்போது கீதா, மலையாளத்தில் நடிகை ஊர்வசி போன்ற நடிகைகள் நடத்தி வருகின்றனர்.  இந்த நிகழ்ச்சிகளில் குடும்ப பிரச்சனைகள் அலசப்படுகிறது. சில சமயங்களில் அது சண்டைகளிலும் முடிகிறது.  எனவே, இதுபோன்ற நிகழ்ச்சிகள் தற்போது பொதுமக்கள் மத்தியில் முகம் சுழிக்கும் அளவுக்கு வந்துள்ளது.   
 
சாதாரண மக்களின் பிரச்சனையை ஊடக வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அதன் மூலம் காசு பார்ப்பதாக பரவலாக பேசப்படுகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிகளை பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகை ஸ்ரீபிரியா “ மக்களுக்கு குடும்பத்தில் பிரச்சனை என்றால் அதனை தீர்த்து வைக்க நீதிமன்றம் இருக்கிறது. குற்றச்செயல்கள் செய்திருந்தால் அதனை தீர்க்க பல்வேறு சட்ட பிரிவுகள் இருக்கிறது. ஆனால் அதனை விட்டுவிட்டு சினிமா நடிகைகள் நடுவர்களாக இருந்து கொண்டு இது போன்ற பிரச்சனைகளை வைத்து நிகழ்ச்சி நடத்துவது நல்லதல்ல. இதனை நிறுத்த வேண்டும்” என கூறியிருந்தார்.
 
அதேபோல், நடிகை ராதிகா தனது டிவிட்டர் பக்கத்தில் “இது போன்ற நிகழ்ச்சிகளில் படிப்பறிவில்லாதவர்கள் சிக்குகிறார்கள். அறிவில்லாதவர்கள் அதை பார்க்கும் வரை இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு முடிவே கிடையாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இந்நிலையில், முதல் மரியாதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்ரீரஞ்சனி தனது பேஸ்புக் பக்கத்தில் “கவுன்சிலிங் (ஆலோசனை) என்ற பெயரில் தொலைக்காட்சிகள் நடத்தும் நிகழ்சிகள் வெட்ககரமானது. நான் இங்கே நடிகை குஷ்பு நடத்தும் நிஜங்கள் நிகழ்ச்சியிலிருந்து சில காட்சிகளை இங்கே பதிவிட்டுள்ளேஎன். அதில் குஷ்பு ஒரு ஆணின் சட்டையை பிடித்து இழுக்கிறார். 


 

 
இதற்கு பெயர்தான் கவுன்சிலிங்கா? இது கொடுமை, தவறானது, தாக்குதல், பாலின பாகுபாடு. இதுபோன்ற நிகழ்ச்சிகளை கண்டு பொதுமக்கள் ஏமாந்துவிடக் கூடாது. இந்த நிகழ்ச்சிகள் உங்களுக்கு எந்த வகையிலும் உதவாது. மேலும், உங்கள் குடும்ப கவுவரத்தை அந்நிகழ்ச்சிகள் வெளிச்சம் போட்டு காட்டி கேவலப்படுத்துகின்றன. அதன் மூலம் அந்த சேனல்கள் காசு சம்பாதிக்கின்றன.
 
இந்த நிகழ்ச்சிகளை நடத்தும் சில நடிகைகள், மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதற்கு எந்த தகுதியும் இல்லாதவர்கள். அதற்கு தனியாக ஆலோசனை மையங்கள் இருக்கின்றன. என்.ஜி.ஓ. நிறுவனங்கல் இலவசமாக ஆலோசனை அளிக்க தயாராக உள்ளன. நீங்கள் நீதிமன்றத்திற்கு செல்லும் முன் அங்கு செல்வது நல்லது.
 
இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன், ஒருவரின் சட்டை பிடித்து இழுத்து பேசியதற்காக குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இவரின் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :