Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மக்களை கட்டு கட்டா கட்டிப்புட்டு, மந்திரிங்க கட்டு கட்டா கட்டுறாங்க: டுவிட்டரில் கொந்தளிக்கும் கஸ்தூரி!

மக்களை கட்டு கட்டா கட்டிப்புட்டு, மந்திரிங்க கட்டு கட்டா கட்டுறாங்க: டுவிட்டரில் கொந்தளிக்கும் கஸ்தூரி!


Caston| Last Modified செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (15:12 IST)
சமையல் எரிவாயு மானியம் ரத்த செய்யப்படுவதாக சமீபத்தில் தகவல் பரவி வந்தது. இதனையடுத்து இந்த ரத்து தொடர்பாக நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார்.

 
 
சமீப காலமாக நடிகை கஸ்தூரி டுவிட்டரில் ஆக்டிவாக செயல்படுகிறார். குறிப்பாக அரசியல் தொடர்பாக பல கருத்துக்கள் கூறி வருகிறார். அவை வைரலாகவும் பரவுகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சமையல் எரிவாயு மானியம் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக பரவிய தகவல் தொடர்பாக கருத்து கூறியுள்ளார்.
 
காஸ் மானியத்தை ரத்து செய்துவிட்டு, மாதந்தோறும் சிலிண்டருக்கு 4 ரூபாய் உயர்த்தவும் அரசு முடிவு செய்ததாக கூறப்பட்டது. மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இது கஸ்தூரியை கொந்தளிக்க வைத்துள்ளது.

 
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், ரேஷன் கட்டு காஸ் கட்டு பவர்கட்டு தண்ணீர் கட்டு. மக்களை கட்டு கட்டா கட்டிப்புட்டு மந்திரிங்க கட்டு கட்டா கட்டுறாங்க. #விளங்கும் #இம்சைஅரசன் என அவர் கூறியுள்ளார்.
 
மேலும் எம்பி, எம்எல்ஏக்களின் சலுகைகளை குறைப்பதற்கு பதிலாக ஏன் ஏழை நடுத்தர மக்களை அடிக்கிறீர்கள் என அவர் சாடியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :