ஆர்.ஜே கேட்ட கேள்வி: பேட்டியிலிருந்து கோபமாக வெளியேறிய கௌதமி- வீடியோ

bala| Last Modified திங்கள், 9 ஜனவரி 2017 (12:03 IST)
நடிகை கௌதமி சமீப காலங்களில் பொது நிகழ்ச்சிகள் பலவற்றில் பங்கேற்று வருகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேக உள்ளது என்று கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் சமீபத்தில் வானொலி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவரிடம் கமலிடமிருந்து ஏன் விலகினீர்கள் என்றும், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் என்று கடிதம் எழுதியது உங்களது விளம்பரத்திற்காகத்தானே என கேள்வி எழுப்பினார். இதனால் கோபம் அடைந்த கௌதமி, இந்த பேட்டியை முடித்துக்கொள்ளலாம். என் வாழ்க்கையில் பேட்டியிலிருந்து பாதியில் செல்வது இதுதான் முதன்முறை என்று கூறி பேட்டியிலிருந்து பாதியில் வெளியேறினார்.

அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு:-

webdunia

இதில் மேலும் படிக்கவும் :