1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : ஞாயிறு, 11 டிசம்பர் 2016 (11:18 IST)

ஜெயலலிதா சமாதிக்கு அஞ்சலி செலுத்திய நடிகை த்ரிஷா

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு நடிகை த்ரிஷா இன்று காலை அஞ்சலி செலுத்தினார்.


 

 
உடல் நலக்குறைபாடு காரணமாக கடந்த செப்டம்பர் 22ம் தேதி சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 5ம் தேதி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். 
 
இதையடுத்து, 6ம் தேதி அவரின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சமாதிக்கு அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. 
 
தற்போது பொதுமக்கள் ஏராளமனோர், 24 மணி நேரமும் அவரின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சில அதிமுக விசுவாசிகள் அங்கேயே மொட்டையும் அடித்து கொண்டு தங்கள் சோகத்தை வெளிப்படுத்துகின்றனர். ஏராளமானோர் அழுத வண்ணம் அவரின் சமாதியின் அருகிலேயே உலவி வருகின்றனர்.


 

 
இந்நிலையில், நடிகை த்ரிஷா இன்று காலை ஜெ.வின் சமாதிக்கு சென்று மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தினார்.