1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 30 ஜூன் 2017 (12:30 IST)

வெறுப்பேற்றிய சினேகன் : விருதை வாங்க மறுத்த ஓவியா (வீடியோ)

நடிகர் கமல்ஹாசன் நடுவராக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டது. இதில் நடிகர், நடிகைகள்  உட்பட 15 பேர் பங்கு பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் 100 நாட்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை.  


 

 
இந்த நிகழ்ச்சி குறித்து பல்வேறு செய்திகள் சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று விஜய் தொலைக்காட்சி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. 
 
அதில், ஒவ்வொருவருக்கும் கவிஞர் சினேகன் ஒரு விருது அளிக்கிறார். தான் உண்மை மட்டுமே பேசுபவன் என்றும் அதன் படியே விருது குடுப்பதாக கூறும், அவர் ஜூலிக்கு Unhygienic என்ற விருதும், நடிகர் பரணிக்கு Dis Honnest (உண்மை இல்லாத) என்ற விருதும் கொடுக்கிறார். அதேபோல், நடிகை ஓவியாவிற்கு ‘கடின உழைப்பாளி’ என்ற விருது கொடுக்கிறார். 
 
ஏற்கனவே, ஓவியாவிற்கும் சினேகனுக்கும் பட இடங்களில் முட்டிக்கொண்டது. அதன் பின் ஓவியா மன்னிப்பு கேட்டார். எனவே, அதை மனதில் கொண்டு, சினேகன் தன்னை கலாய்க்கிறார் என கருதிய ஓவியா, அந்த விருதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என கூறிவிட்டு செல்கிறார். 
 
அதன் பின்பு அங்கு என்ன நடந்தது என்பது விஜய் தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பாகும் எனத் தெரிகிறது.