1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By இரா காஜா பந்தா நவாஸ்
Last Modified: திங்கள், 23 செப்டம்பர் 2019 (15:45 IST)

பிகில் புரட்சி! இது பிகில் புரட்சி!!!

அன்பு ஒன்றுதான் அனாதையாய் என்பதைப் போல தமிழகமும் அனாதையாய் ஆக்கப்பட்டு இருக்கிறது. இங்கு கருத்து சுதந்திரம் மீண்டும் கேள்விக்குறியாக்கப்பட்டு இருக்கிறது. 
 
இந்திய அரசியல் சட்டம் நம் அனைவருக்கும் நம் கருத்து உரிமையை உறுதி செய்கிறது. அதற்கு நடிகர் விஜய்யும் விதி விலக்கல்ல. நடிகர் விஜய்யின் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்திருந்தால் என்ற பேச்சு அவரது ஆதங்கம்; அவரது கருத்து உரிமை.
 
ஜெய் ஸ்ரீ ராம் என்று கடவுள் ராமரின் பெயரால் நடக்கும் கொலைகள் எப்படி ராமருக்கும் தேசத்துக்கும் அவமானமோ? அதைப் போலதான் கருத்துக்கு எதிர் வினையாற்றும் அமைச்சர்கள். அமைச்சர்கள் சொல்வதுப் போல புதுப்பட விளம்பர உத்தி என்று புறம் தள்ளி விட முடியாது. மக்களுக்கு உண்மையில் அரசியல் விழிப்புணர்வு தேவை என்பதே விஜய் பேச்சின் உள் நோக்கம்.
 
ராமரின் வன வாசத்தின் போது ராமரின் பாத காலணிகள் ஆட்சி செய்ததைப் போல இங்கு ஆட்சி நடைப்பெறவில்லை. ஜெயலலிதா எப்போது அப்போலோவில் அனுமதிக்கப்பட்டாரோ அப்போதே இந்த அமைச்சர்கள் எல்லாம் நூலின் அதிர்வுக்கு ஆடும் பொம்மைக்கள் ஆனார்கள். முன்பு எல்லாம் இவர்களுக்கு ஒரு ஜெயலலிதா என்ற ஒரு முதலாளி. இப்போது இவர்களுக்கு டெல்லியின் இருந்து பல முதலாளிகள்.
 
இறுதியாக அமைச்சர்களே!
உண்மையில் பலரது தியாகத்தால் பெற்றதுதான் சுதந்திரம். கருத்தை கருத்தால் எதிர் கொள்ளுங்கள். கருத்து சொன்னவர் யார்? என்ன குலம்? என்ன கோத்திரம்? என்ன தொழில் செய்கிறார்? என்று பார்க்க வேண்டாம். 










      (இரா காஜா பந்தா நவாஸ்)