Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிக்பாஸிலிருந்து இன்று வெளியேறுகிறாரா வையாபுரி?


Murugan| Last Modified ஞாயிறு, 16 ஜூலை 2017 (16:31 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் வையாபுரி இன்று வெளியேறி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 
இந்த நிகழ்ச்சியிலிருந்து நடிகை அனன்யா, நடிகர் ஸ்ரீ, கஞ்சா கருப்பு, பரணி ஆகியோர் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில் அடுத்து யார் வெளியேறப்போகிறார் என்பதை, அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் கமல்ஹாசன் இன்று அறிவிக்கிறார். 
 
அந்த லிஸ்டில் நடிகை ஆர்த்தி, ஜூலி, வையாபுரி, ஒவியா ஆகியோர் இருப்பதாகவும், ஓவியாவிற்கு அதிக வாக்குகள் அளித்து மக்கள் அவரை காப்பாற்றிவிட்டனர் என்றும் கமல்ஹாசன் நேற்று தெரிவித்தார். எனவே, இன்றைய நிகழ்ச்சியில் அடுத்து யார் வெளியேறப்போகிறார்கள் என்பது தெரிந்துவிடும்.


 

 
அநேகமாக, வையாபுரி வெளியேறு விடுவார் எனத் தெரிகிறது. ஏனெனில், அவர் சற்று மன உலைச்சலுடன் சோகமாகவே காணப்படுகிறார். அதோடு, இரண்டு வாரங்களில் நான் வீட்டிற்கு திரும்பிவிடுவேன் என மனைவியிடம் கூறிவிட்டுதான்  அவர் இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டார் என்பது தெரியவந்துள்ளது. மேலும்,  என் கணவர் விரைவில் வீடு திரும்பிவிடுவார் என அவரது மனைவி தெரிவிக்கும் ஆடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
 
ஆர்த்தி அல்லது ஜூலி யாரையேனும் ஒருவரை வெளியேற்றிவிட்டால், சுவாரஸ்யத்திற்கு, சர்ச்சைக்கும் பஞ்சம் ஏற்படும் என்பதால் தற்போதைக்கு அவர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள் என சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்படுகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :