வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 9 அக்டோபர் 2015 (15:01 IST)

ரஜினியை சிவாஜிராவ் என்று கூறுவீர்களா? : ராதிகா மீது வடிவேல் காட்டம்

விஷால் நியாத்தைக் கேட்டதால் அவரை விஷால் ரெட்டி என்று அழைக்கிறீர்கள். ரஜினி எதிர்த்தால் சிவாஜிராவ் என்பீர்களா? என்று நடிகர் வடிவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
நடிகர் சங்க தேர்தல் சூடு பிடித்திருக்கும் நிலையில், சரத்குமாரின் மனைவி ராதிகா எதிர் அணியில் இருக்கும் விஷால் பற்றி எங்கு பேசினாலும், அவரை விஷால் ரெட்டி என்று அழைத்து வருகிறார்.
 
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நடிகர் வடிவேலு, விஷால் உங்களை எதிர்த்தால் அவரை விஷால் ரெட்டி என்று அழைப்பீர்கள். ஒருவேளை ரஜினிகாந்த் உங்களை எதிர்த்தால் அவரை சிவாஜிராவ் என்று அழைப்பீர்களா? என்று கேள்வி எழுப்பினார். மேலும், நடிகர் சங்கம் பொதுவானது. ஜாதியைப் பற்றி ராதிகா குறிப்பிடக்கூடாது என்று கூறினார். 
 
இது பற்றி கருத்துக்கூறிய நடிகர் விஷால், அதன் பெயர் நடிகர் சங்கம் இல்லை. தென்னிந்திய நடிகர் சங்கம். அதிலேயே எல்லாம் அடங்கிவிட்டது. நல்லது யார் வேண்டுமனாலும் செய்யலாம். இதில் ஜாதியை பற்றியெல்லாம் குறிப்பிடக்கூடாது என்று கூறியுள்ளார்.