Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வீட்டை விட்டு வெளியேறிய சிம்பு: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குடும்பத்தோடு போராட்டம்!

வீட்டை விட்டு வெளியேறிய சிம்பு: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குடும்பத்தோடு போராட்டம்!


Caston| Last Modified வியாழன், 12 ஜனவரி 2017 (17:08 IST)
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தரவேண்டும் என இந்த முறை அதிகமான போராட்டங்கள் வெடித்து வருகிறது. பல்வேறு பிரபலங்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

 
 
இந்நிலையில் பிரபல தமிழ் நடிகர் சிம்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளார். ஏற்கனவே பலமுறை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவரும் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
 
இந்த சந்திப்பின் போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை அதாவது இன்று மாலை 5 முதல் 5.10 வரை 10 நிமிடம் அனைவரும் வீட்டைவிட்டு வெளியே வந்து அமைதியாக நின்று அமைதிப்போராட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
 
இதனையடுத்து சரியாக இன்று மாலை 5 மணிக்கு நடிகர் சிம்பு மற்றும் அவரது தந்தை டி.ராஜேந்திரர் உட்பட அவரது கும்பத்தினர் தி.நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து வெளியே வந்து அமைதியாக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
 
நடிகர் சிம்பு அறிவித்த இந்த போராட்டத்தில் இயக்குநர் ராம் உட்பட திரையுலகினர் பலரும் கலந்துகொண்டனர். முன்னதாகவே இந்த அமைதிப்போராட்டத்துக்கு அனுமதி வாங்கி நடத்தி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :