செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 26 நவம்பர் 2020 (14:10 IST)

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்..! சென்னை வெள்ளத்தில் துடுப்பு போடும் மன்சூர் அலிகான்!

சென்னையில் பெய்துள்ள கனமழையால் வீதிகளில் தண்ணீர் புகுந்துள்ள நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் துடுப்பு போட்டி பாடி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

வங்க கடலில் ஏற்பட்ட நிவர் புயலால் சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் அடையாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சில இடங்களில் கரைகள் உடைந்துள்ளன. பல பகுதிகளில் மழைநீர் வெளியேற வசதி இல்லாததால் குடியிருப்புகள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில் சென்னையில் மழை வெள்ளத்தில் நடிகர் மன்சூர் அலி கான் படகில் செல்லும் வீடியோ வைரலாகியுள்ளது. சென்னை வீதிகளில் மழை வெள்ளத்தில் படகில் அமர்ந்து துடுப்பு போட்டு செல்லும் மன்சூர் அலி கான் “எனக்கு ராஜாவா நான் வாழுறேன்” என்றும், “மழையே மழையே தமிழ்நாட்டை விட்டுவிடு” என்றும் பாடிக்கொண்டே செல்வது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. நடிகர் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.