Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டிசம்பர் 4ம் தேதி ; அப்பல்லோவில் பரபரப்பு - மனோபாலா வெளியிட்ட பகீர் தகவல்

புதன், 12 ஏப்ரல் 2017 (15:37 IST)

Widgets Magazine

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தவர் நடிகர் மனோபாலா. ஜெ.வின் மறைவிற்கு பின் அவர் தற்போது ஓ.பி.எஸ்-ஸின் ஆதரவாளராக மாறியுள்ளார்.


 

 
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் கொடுத்த ஒரு பேட்டி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியது இதுதான்:
 
ஜெயலலிதா உடல் நலம் பற்றி விசாரிப்பதற்காக நான் டிசம்பர் 4ம் தேதி அப்போலோ மருத்துவமனைக்கு சென்றேன். லிஃப்டில் ஏறி மேல் தளத்திற்குஇ சென்றேன். அப்போது அங்கு அனைத்து எம்.எல்.ஏக்களும் இருந்தனர். அனைவரும் மௌனமாக நின்று கொண்டிருந்தனர். பார்ப்பதற்கு ஒரு சினிமா காட்சி போல் அது இருந்தது. அப்போது, ஒரு அமைச்சரின் உறவினர் என்னிடம் வேகமாக ஓடிவந்து  “அண்ண.. ஷூட்டிங் இருந்தால் கேன்சல் செய்து விட்டு வீட்டிற்கு செல்லுங்கள்” எனக் கூறினார். 
 
ஏதோ நடக்கப் போகிறது என்பதை உணர்ந்த நான், படப்பிடிப்பை கேன்சல் செய்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டேன். ஆனால், மறுநாள் காலை வரை எந்த அறிவிப்பும் வரவில்லை. எனவே, அவர் ஏன் என்னிடம் அப்படி கூறினார் எனத் தெரியவில்லை. நடிகர்கள் ஆனந்தராஜ், விந்தியா ஆகியோரை நான் பாராட்டுகிறேன். அவர்களின் தைரியம் நிச்சயம் எனக்கில்லை” எனக் கூறினார்.
 
முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்து விட்டதாகவே அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் மனோபாலாவின் பேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பெண்களை தாக்கிய டிஎஸ்பி-க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி நேற்று திருப்பூர் மாவட்டத்தில் போராட்டம் நடத்திய பெண்களை ...

news

விஷாலை விளாசும் தங்கர்பச்சான்: பெண்ணின் உடலை சந்தைப்படுத்துவதா?

சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்றது. ...

news

கையில காசு வாயில தோச: தினகரனுக்கு ஷாக் கொடுத்த நிர்வாகிகள்

பணம் கொடுத்தால்தான் கையெழுத்து போடுவோம் என அதிமுக நிர்வாகிகள் கூறிவருவதால் அதிமுக துணை ...

news

1300 குழந்தைகளுக்கு ஒரு போஸ்ட்மேன் அப்பாவா: போர இடத்துல எல்லாம் என்ன வேல பாத்திருக்காரு!!

2001 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த தனியார் துப்பறியும் அதிகாரியை இரு இளைஞர்கள் சந்தித்து ...

Widgets Magazine Widgets Magazine