Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இன்னும் 4 வருடம் ; கட்டாய திருமணம் - கமல்ஹாசன் அதிரடி பேட்டி


Murugan| Last Updated: திங்கள், 13 மார்ச் 2017 (15:38 IST)
தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

 

 
சமீபகாலமாக நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகள் குறித்து தனது கருத்தை தெரிவித்து வருகிறார்.
 
இந்நிலையில், சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர் “தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் தேர்தல் நடைபெறுவதுதான் நல்லது. இன்னும் 4 வருடங்கள் ஆட்சி தொடர வேண்டும் என யாரும் கட்டாயப்படுத்தவில்லை. சட்டத்தை காரணம் காட்டி கட்டாய திருமனம் செய்தது போல ஏன் இன்னும் 4 வருடங்கள் ஆட்சியை தொடர வேண்டும். 
 
மீண்டும் தேர்தல் நடந்து, தங்களுக்கான தலைவரை மக்களே தேர்வு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இது யார் வேண்டுமானால் கூறலாம். பிரதமரும், முதல்வரும் மக்களுக்கு சேவை செய்யும் ஒரு கருவிதான். இதை கூறுவதற்கு நான் அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை” என அவர் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :