Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எங்களின் முதல் எதிரி கமல்ஹாசன் - பீட்டா பூர்வா ஜோசிபுரா திமிர் பேச்சு


Murugan| Last Modified சனி, 4 பிப்ரவரி 2017 (11:22 IST)
இந்தியாவில் எங்களின் முதல் எதிரி நடிகர் கமல்ஹாசனே என பீட்டா அமைப்பின் நிர்வாக இயக்குனர் பூர்வா ஜோசிபுரா கருத்து தெரிவித்துள்ளார்.

 

 
ஜல்லிக்கட்டு வேண்டி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராடியது அவர்களுக்கு ஆதரவாக கொடுத்தவர் நடிகர் கமல்ஹாசன். போராட்டம் முடிவுக்கு வரும் வரை அவர்களுக்கு ஆதரவாகவே கருத்துகளை தெரிவித்து வந்தார். போராட்டத்தின் இறுதியில் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கும் அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
 
மேலும், ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமாக இருந்த பீட்டா அமைப்பிற்கு எதிராக அவர் கருத்துகளை கூறி வந்தார். இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படுவதை தடுக்க முடியாது பீட்டா அமைப்பு, ஜல்லிக்கட்டிற்கு மட்டும் தடை கேட்டு இருமுகம் காட்டுகிறது என கூறினார். 
 
இந்நிலையில், சமீபத்தில் கருத்து தெரிவித்த பீட்டா நிர்வாக இயக்குனர் பூர்வா ஜோசிபுரா, “இந்தியாவில் நடிகர் கமல்ஹாசனே எங்களுக்கு முதல் எதிரி. பீட்டா அமைப்பு பற்றி கருத்து கூறுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்தியா மற்றும் உலக நாடுகளில் என்ன செய்ய வேண்டும் என எங்களுக்கு தெரியும்” என திமிராக கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :