குறுக்கு வழியில் முதல்வராக கூடாது: சசிகலாவை தாக்கும் ஆனந்தராஜ்!!


Sugapriya Prakash| Last Modified திங்கள், 6 பிப்ரவரி 2017 (12:34 IST)
சசிகலா பொதுச்செயலாராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் ஆனந்தராஜ் தற்போது சசிகலா சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

 
 
சசிகலா, இப்படி அவசர அவசரமாக முதல்வராக்க வேண்டியதில்லை. பொதுமக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை. முதலமைச்சராக வேண்டும் என்றால் நேரடியாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும். இப்படி குறுக்கு வழியில் முதல்வராகக் கூடாது என காட்டமாக கூறியுள்ளார்.
 
மேலும், தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு புரியவில்லை. யார் முதல்வராக வர வேண்டும் என்பது குறித்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மக்களை கேட்டிருக்க வேண்டும் என ஆனந்தராஜ் கருத்து தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டால் அவருக்கு பதில் வேறுயாராவது முதல்வர் ஆவார்கள் என்று நடிகர் ஆனந்தராஜ் கூறியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :