Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நடிகர் அஜித்துக்கு இருக்கும் தைரியம் கமலுக்கு இல்லை: இழுத்து விடும் அதிமுக!

நடிகர் அஜித்துக்கு இருக்கும் தைரியம் கமலுக்கு இல்லை: இழுத்து விடும் அதிமுக!

Last Modified: திங்கள், 17 ஜூலை 2017 (12:15 IST)

Widgets Magazine

நடிகர் கமலுக்கு ஆதரவாக செயல் தலைவர் ஸ்டாலின் குரல் கொடுத்தை அடுத்து நடிகர் கமல் அவருக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்தார். இந்நிலையில் நடிகர் அஜித் பெயரை வைத்து திமுகவையும் கமலையும் சீண்டியுள்ளது அதிமுக.


 
 
நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை காயத்ரி ரகுராம் விஷயத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல் தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளதாக கூறினார்.
 
இதனையடுத்து தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து நடிகர் கமலை குறி வைத்து பேட்டியளித்து வருகின்றனர். அவரது விமர்சனத்துக்கு பதில் அளிக்காமல் அவர் மீது தனிப்பட்ட தாக்குதலை நடத்துகின்றனர்.
 
இதனையடுத்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நடிகர் கமலுக்கு ஆதரவாக குரல் கொடுத்து அறிக்கை வெளியிட்டார். அதனையடுத்து நடிகர் கமலும் ஸ்டாலினின் ஆதரவுக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்தார்.
 
இந்நிலையில் இந்த விவகாரத்தில் நடிகர் அஜித்தை இழுத்து விட்டுள்ளார் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். ஏற்கனவே இது தொடர்பாக பேசிய அவர் நடிகர் கமல் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.
 
இந்நிலையில் தற்போது பேசிய அவர், நடிகர் அஜித்துக்கு இருக்கும் தைரியம் நடிகர் கமலுக்கு இல்லாமல் போனது ஏன். திமுக ஆட்சியில் நடிகர்கள் மிரட்டப்படுகிறார்கள் என கருணாநிதி முன்னிலையில் அஜித் பேசும் போது கமல் எங்கு சென்றார் என அமைச்சர் கேள்வி எழுப்பினார். மேலும் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை வைத்தால் அதற்கு முறையாக பதில் சொல்லுவோம் என்றார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

எல்லையில் சீன ராணுவம் போர் பயிற்சி

அருணாச்சல் பிரதேச எல்லையில் சீன ராணுவம் போர் பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளது.

news

காயத்ரியை விட பலமடங்கு நாகரீகமானவர் பரணி - எப்படி தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ள காயத்ரியை விட, அதிலிருந்து வெளியேறிய நடிகர் பரணி, ...

news

ஜெயலலிதா இருக்கும் போது வாயை பொத்திக்கொண்டு இருந்த கமல்: ஜெயக்குமார் சீற்றம்!

நடிகர் கமலுக்கு எதிராக ஆளும் கட்சியின் வார்த்தை தாக்குதல் தொடர்ந்தவாறே உள்ளது. ...

news

பதில் சொல்ல வேண்டும்..பழிக்கக்கூடாது - கமலுக்கு ஓ.பி.எஸ் அணி ஆதரவு

தமிழக அரசு பற்றி நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ள கருத்திற்கு ஓ.பி.எஸ் அணி ஆதரவு ...

Widgets Magazine Widgets Magazine