செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 22 ஜூலை 2022 (12:30 IST)

வதந்திகள் பரப்பிய 32 யூடியூப் சேனல்கள் கண்டுபிடிப்பு: கள்ளக்குறிச்சி எஸ்பி தகவல்!

youtube
கள்ளக்குறிச்சி கலவரம் விவகாரத்தில் வதந்திகளை பரப்பிய 32 யூடியூப் சேனல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்த சேனல்கள் மீது சட்டப்படியான தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கள்ளக்குறிச்சியில் புதிதாக பதவியேற்ற எஸ்பி பகலவன் தெரிவித்துள்ளார்
 
கள்ளக்குறிச்சியில் 12 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம் குறித்து பல வதந்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டதாக கூறப்படுகிறது 
 
மாணவி மரணம் குறித்து மாணவி மரணம் பற்றி செய்திகள் குறித்தும் 32 யூடியூப் சேனல்களில் வதந்திகள் பரப்பப்பட்டது என்றும் இதுகுறித்த கணக்கெடுப்பு முடிந்த பின்னர் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்கள் மீது  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது